Yennai Tharugiren Tharugiren Um Karathil

குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்கும்
என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா
தருகிறேன் உம் கையிலே

என்னை தருகிறேன் தருகிறேன்
உம் கரத்தில் என்னை படைக்கிறேன்
படைக்கிறேன் உம் பாதத்தில்

உம் சேவைக்காய் என்னை தருகிறேன்
வனைந்திடும் உம் சித்தம் போல்
எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திட
உருவாக்குமே உருவாக்குமே

உமக்காகவே நான் வாழ்ந்திட
வனைந்திடும் உம் சித்தம் போல் - உம்
சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே
உருவாக்குமே உருவாக்குமே

உம் வருகையில் உம்மோடு நான்
வந்திட என்னை மாற்றுமே ஓய்வின்றி
உம்மைப் பாட ஓயாமல் உம்மைத் துதிக்க
உருவாக்குமே உருவாக்குமே