யாவே யாவே நீரே என் தெய்வமே
என் தலைமுறையாய் யாவே
நீரே என் தெய்வமே
வார்த்தை தந்தவரே அதில்
கொண்டென்னை சேர்ப்பவரே – 2
1. என் கருவை உம் கண்கள்
நிதமும் கவனித்ததே
நான் வெளிப்படும் நாள் துவங்கி
உம் சார்பில் விழச்செய்தீரே
- வார்த்தை தந்தவரே
2. நான் அறியா ஸ்தானங்களில்
என்னையும் அமர்த்தினீரே
என் இதயத்திற்கேற்றவனே
என்று என்னையும் அழைத்தவரே
- வார்த்தை தந்தவரே
3. உம் ஆவி என்மேல் அமர்ந்ததினால்
உம்மோடு இசைந்திருப்பேன்
உம் பிரசன்னத்தில் நான் அமர்ந்து
தினம் உம்மோடு சஞ்சரிப்பேன்
- வார்த்தை தந்தவரே
Yahweh Yahweh neerae en deivamae
En thalaimuraiyaai yahweh
Neerae en deivamae
Vaarthai thanthavare athil
Kondaennai serpavarae – 2
1. En karuvai um kangal
Nithamum kavanithathae
Naan velipadum naal thuvangi
Um saarpil vilaseitheerae
- Vaarthai thanthavare
2. Naan ariyaa sthanangalil
Ennaiyum amarthineerae
En ithayathirketravanae
Endru ennaiyum alaithavarae
- Vaarthai thanthavare
3. Um aavi enmael amarnthathinaal
Ummodu isainthirupaen
Um prasanathil naan amarnthu
Dhinam ummodu sancharipaen
- Vaarthai thanthavare