Valla Kirubai Nalla Kirubai

வல்ல கிருபை நல்ல கிருபை
வழுவாமல் காத்த சுத்த கிருபை
அக்கினியில் வேகாமல் காத்த கிருபை
தண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை

உம் கிருபை என்னை தாங்கிடுதே
உம் கிருபை என்னை நடத்திடுதே

அல்லே அல்லே லுயாயாயா

அக்கினியின் சூழையில் வெந்து வெந்து போகாமல்
கிருபை தாங்கினதே
என் முடி கூட கருகாமல் புகை கூட அணுகாமல்
கிருபை தாங்கினதே

பலவித சோதனை நெருக்கிய நேரங்கள்
கிருபை தாங்கினதே
என் நெருக்கத்தின் நேரத்தில் நசுங்கி நான் போகாமல்
கிருபை தாங்கினதே