Vaanathi Vaanavar Nam Yesuve

வானாதி வானவர் நம் இயேசுவை
வாத்தியங்கள் முழுங்கிட பாடுவோம்
தேவாதி தேவன் நம் இயேசுவை
நாட்டியங்கள் ஆடி கொண்டாடுவோம்

அல்லேலூயா அல்லேலூயா (4)
வானங்களை விரித்தவரை பாடுவோம்
வானபரன் இயேசுவைக் கொண்டாடுவோம்

வாக்குத்தத்தம் தந்தவரை பாடுவோம்
வாக்குமாறா தேவனைக் கொண்டாடுவோம்

பாவச்சேற்றில் வாழ்ந்து வந்த என்னையே
பாசக்கரம் நீட்டி என்னை தூக்கினார்

பாரில் வந்த பரலோக நாயகன்
பலியாகி என்னை மீட்டுக் கொண்டாரே