Unga Kirubaiyinaalae Uyir Vazhkiraen

உங்க கிருபையினாலே உயிர் வாழ்கிறேன்
உங்க இரக்கத்தாலே நிலை நிற்கிறேன் (2)
நன்மைகள் எதிர்பாராமல்
உதவிட்ட என் நேசரே
கோடி நன்றி ஐயா (2)
நீர் செய்த நன்மைகளுக்காய் - கோடி நன்றி ஐயா

கலங்கி நின்று கண்ணீர்விட்டு கதறி நான் அழுகையில்
கூக்குரல் கேட்டு எனக்கு பதில் தந்தீரே (2)
பலனற்று இருந்த என்னை பலவானாய் மாற்றியே
மகிழ்வித்து நடத்தினீரே - கோடி நன்றி ஐயா

யாருமின்றி தனிமையில் நான் தவித்திட்ட நேரத்தில்
தாங்கி என்னை தப்புவித்து நடத்தினீரே (2)
உதவுவார் யாருமின்றி ஒதுக்கப்பட்டு இருந்த என்னை
உன்னதத்தில் நிறுத்தினீரே - கோடி நன்றி ஐயா


Unga kirubaiyinalae uyir valkiren
Unga irakkathalae nilai nirkiren (2)
Nanmaigal ethirparamal
Uthavitha en nesarae
Kodi nandri ayya (2)
Neer seitha nanmaikalukaai - Kodi nandri ayya

Kalangi nindru kaneervithu kathari naan alugaiyil
Kookural kethu enaku pathil thantheerae (2)
Palanathru iruntha ennai palavaanai matriyae
Magilvithu nadathineerae - Kodi nandri ayya

Yarumindri thanimaiyil naan thavithitha nerathil
Thaangi ennai thapuvithu nadathineerae (2)
Vuthavuvaar yarumindri othukapathu iruntha ennai
Vunathathil nirunthineerae - Kodi nandri ayya