Ummai Uyarthi Uyarthi

உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம் மகிழுதைய்யா
உம்மை நோக்கிப் பார்த்து
இதயம் துள்ளுதைய்யா

1. கரம் பிடித்து நடத்துகிறீர்
காலமெல்லாம் சுமக்கின்றீர்
நன்றி நன்றி (4) – உம்மை

2. கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்
காயமெல்லாம் ஆற்றுகிறீர்

3. நல்லவரே வல்லவரே
காண்பவரே காப்பவரே

4. இருப்பவரே இருந்தவரே
இனிமேலும் வருபவரே

5. சகாயரே தயாபரரே
சிருஷ்கரே சிநேகிதரே

6. வருடங்களை நன்மைகளினால்
முடிசூட்டி மகிழ்பவரே