Ummai Aarathippen Ummai Aarathippen

உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்-2

என் நாட்கள் முடியும் வரை
என் ஜீவன் பிரியும் வரை
என் சுவாசம் ஒழியும் வரை
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன்-2

1. தாயின் கருவில் உருவாகும் முன்னே
பேர் சொல்லி அழைத்தவர் நீரே
தாயினும் மேலாக அன்பு வைத்து
நீர் எனக்காக ஜீவன் தந்தீரே -2

2. எத்தனை முறை இடறினாலும்
அத்தனையும் மன்னித்தீரே
நன்மையையும் கிருபையும் தொடரச்செய்து
என்னை மீண்டும் நடக்க வைத்தீரே -2

3. பாவி என்று என்னை தள்ளிடாமல்
அன்போடு அணைத்து கொண்டீரே
என்னையும் உம்முடன் சேர்த்துகொள்ள
நீர் எனக்காக மீண்டும் வருவீரே -2


Ummai arathippen
Ummai Arathippen - 2

En natkal mudiyum varai
En jeevan piriyum varai
En suvasam oliyum varai
Ummai arathippen
Ummai arathippen - 2

1. Thayin karuvil vuruvaagum munnae
Paer solli alaithavar neerae
Thaayinum melaaga anbu vaithu
Neer enakaga jeevan thantheerae - 2

2. Ethanai murai idarinaalum
Athanaiyum manitheerae
Nanmaiyaiyum kirubaiyum thodaraseithu
Ennai meendum nadaka vaitheere - 2

3. Paavi endru ennai thallidaamal
Anbodu anaithu kondeerae
Ennaiyum ummudan serthu kolla
Neer enakaga meendum varuveere - 2