துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தியினில் வசிப்போரை
அதிசயமானவரை அதிலுமேலானவரை - துதிப்பேன்
கடந்த துன்பத்தின் காலங்களில்
அடைந்த ஆறா துயரங்களில்
ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்
மாறாத இயேசுவுக்கு ஆனந்தம் - துதிப்பேன்
இன்றையதினம் வரை காத்தீரே
எல்லோரையும் கூட்டி சேர்த்தீரே
நின் கிருபையால் கடந்துவந்தோம்
அன்பே ஆருயிரே ஆனந்தம் - துதிப்பேன்
ஆனந்தமே பரமானந்தமே
அண்ணலை அண்டினோர்க்கானந்தமே
அல்லேலுயா உமக்கு அல்லேலுயா
எல்லா நாளும் உமக்கு அல்லேலுயா - துதிப்பேன்
Thuthipaen thuthipaen dhaevanai
Thuthigal matthiyil vasippapoanai
Adhisayamaanavarai adhilumaelaanavarai - Thuthipaen
Kadantha thunbathin kaalangalil
Adaindha aaraa thuyarangalil
Aarudhal thaerudhal alithittaar
Maaraadha yaesuku anandham - Thuthipaen
Inraiyathinam varai kaatheerae
Elloaraiyum kootti saertheerae
Nin kirubaiyaal kadandhuvandhoam
Anbae aaruyirae aanandham - Thuthipaen
Aanandhamae paramaanandhamae
Annalai andinoarkaanandhamae
Allaeluyaa umkkallaeluyaa
Ellaa naalum umkkallaeluyaa - Thuthipaen