Vallamai Vallamai Aaviyae

வல்லமை வல்லமை ஆவியே
என்னை அனலாக்கிடும்
வல்லமை வல்லமை ஆவியே
என்னை அபிஷேகியும்

சாத்தானின் கோட்டையை முறியடிக்க
வல்லமை தாருமே - 2
தேவனின் ராஜ்ஜியம் எழும்பி கட்ட
வல்லமை தாருமே - 2

ஆவியின் வரங்களினால்
என்னை நிரப்பிடும் - 2
கனிகளை கொடுத்து சாட்சியாய் வாழ்ந்தும்மை
மகிமை படுத்துவேன் - 2

வல்லமை ஊழியம் செய்திடவே
ஆவியால் நிரப்புவீர் - 2
வியாதியை நீக்கி பிசாசை விரட்ட
வல்லமை தாருமே - 2