Ungal Thukam Santhoshamai

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
உங்கள் கவலைகள் கண்ணீர் எல்லாம் மறைந்து விடும்
கலங்காதே மகனே,
கலங்காதே மகளே – 2

1. கடந்ததை நினைத்து கலங்காதே
நடந்ததை மறந்து விடு
கர்த்தர் புதியன செய்திடுவார்
இன்றே நீ காண்பாய்…
கலங்கிடவே வேண்டாம் (4)

2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்
உடைந்த உள்ளம் தாங்குகிறார்
காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்
கண்ணீர் துடைக்கின்றார் – உன்
கலங்கிடவே வேண்டாம் (4)

3. திராணிக்கு மேலாக சோதிக்கப்பட
ஒருநாளும் விடமாட்டார்
தாங்கிடும் பெலன் தருவார்
தப்பி செல்ல வழி செய்வார் – நீ
கலங்கிடவே வேண்டாம் (4)

4. நல்லதோர் போராட்டம் போராடுவோம்
விசுவாசம் காத்துக் கொள்வோம்
நீதியின் கிரீடம் நமக்கு உண்டு
நேசர் வருகையில் தந்திடுவார் – நம்
கலங்கிடவே வேண்டாம் (4)