ஆராதனை ஆராதனை ஆண்டவருக்கே ஆராதனை (2)
உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சியுண்டு
உம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு - உம்முன்னே
நிறைவான மகிழ்ச்சி நீரே
நித்திய பேரின்பமே
- நிறைவான
- உம்முன்னே
1. என்னைக் காக்கும் இறைவன் நீரே
உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன் (2)
எனையாளும் தலைவர் நீரே
உம்மையன்றி ஆசை வேறில்லை (2)
என்னைக் காக்கும் இறைவன் நீரே
அரசாளும் தலைவர் நீரே
ஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை (2)
- உம்முன்னே
2. எனக்குரிய பங்கு நீரே
பரம்பரை சொத்தும் நீரே (2)
ஆலோசனை தரும் தகப்பனே
இரவும் பகலும் பேசும் தெய்வமே (2)
எனக்குரிய பங்கு நீரே
பரம்பரை சொத்தும் நீரே
ஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை (2)
- உம்முன்னே
3. எப்போதும் என் கண்முன்னே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் (2)
வலப்பக்கத்தில் இருப்பதனால்
அசைஉற விடமாட்டீர் (2)
எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
ஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை (2)
- உம்முன்னே
4. என் இதயம் மகிழ்கின்றது
என் உடலும் இளைப்பாறுது (2)
ஜீவமார்க்கம் எனக்கு போதித்தீர்
ஜீவனே உம்மை பாடுவேன் (2)
என் இதயம் மகிழ்கின்றது
என் உடலும் இளைப்பாறுது
ஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை (4)
- உம்முன்னே