Ummai Paadi Thedum Maanithar

உம்மை நாடி தேடும் மனிதர்
உம்மில் மகிழ்ந்து களிகுரட்டும்
உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்
மன அமைதி இன்று பெறட்டும்

மகிமை மாட்சிமை, மாவேந்தன் உமக்கே
துதியும் கணமும், தூயோனே உமக்கே

என் பார்வை சிந்தை எல்லாம்
நீர் காட்டும் பாதையில் தான்
என் சொல்லும் செயலும் எல்லாம்
உம் சித்தம் செய்வதில் தான்

உம்மை வருத்தும் வழியில் நடந்தால்
என்னை திருத்த வேண்டும் தேவா
கருத்தோடு உமது வசனம்
கற்றுத்தந்து நடத்த வேண்டும்

ஒரு நாளும் உம்மை மறவேன்
ஒரு போதும் உம்மை பிரியேன்
மறு வாழ்வு தந்த நேசர்
மணவாளன் மடியில் சாய்ந்தேன்