உம் நாமம் வாழ்க ராஜா விண் தந்தையே
உம் அரசு வருக ராஜா என் தந்தையே
வாழ்க ராஜா அல்லேலூயா – 4
அல்லேலூயா ஓசன்னா – 4
1. யெகோவா யீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக
யெகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்
2. யெகோவா ரூவா உம் நாமம் பரிசுத்தப்படுவதாக
யெகோவா ரஃபா எந்நாளும் சுகம் தருவீர்
3. இராஜாதி இராஜா நீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக
உயிரோடு எழுந்தவரே வேகமாய் வாருமைய்யா