Thuthi Geethamae Paadiyae

துதி கீதமே பாடியே
வாழ்த்தி வணங்கிடுவோம்-2
ஜோதியின் தேவனாம்
இயேசுவைப் பணிந்திடுவோம்-2

1. தந்தைப் போல் நம்மைத் தாங்கியே
தோளில் ஏந்தி சுமந்தனரே-2
சேதம் ஏதும் அணுகிடாமல்
காத்த தேவனைத் துதித்திடுவோம்-2-துதி கீதமே

2. காரிருள் போன்ற வேளையில்
பாரில் நம்மைத் தேற்றினாரே-2
நம்பினோரைத் தாங்கும் தேவன்
இன்றும் என்றுமாய் துதித்திடுவோம்-2-துதி கீதமே

3. பஞ்சைப் போல் வெண்மை ஆகிட
பாவம் யாவும் நீக்கினாரே-2
சொந்த இரத்தம் சிந்தி நம்மை
மீட்ட தேவனைத் துதித்திடுவோம்-2-துதி கீதமே

4. கட்டுகள் யாவும் அறுத்துமே
கண்ணீர் கவலை அகற்றினாரே-2
துதியின் ஆடை அருளிச் செய்த
தேவ தேவனைத் துதித்திடுவோம்-2-துதி கீதமே

5. வானத்தில் இயேசு தோன்றிடுவார்
ஆயத்தமாகி ஏகிடுவோம்-2
அன்பர் இயேசு சாயல் அடைந்து
என்றும் மகிழ்ந்தே வாழ்த்திடுவோம்-2-துதி கீதமே


Thuthi geethamae paadiyae
Vaalthi vanagiduvom -2
Jothiyin devanam
Yesuvai paninthiduvom -2

1. Thanthai poel ummai thaangiyae
Tholil yenthi sumanthanarae -2
Setham yethum anugidaamal
Kaatha devanai thuthi thiduvom -2 - Thuthi Geethamae

2. Kaarirul pondra velaiyil
Paaril nammai thethrinaarae -2
nambinorai thaangum devan
Indrum endrumaai thuthi thiduvom -2 -Thuthi Geethamae

3. Panchai poel venmai aagida
Paavam yaavum neekinaarae -2
Sontha ratham sinthi nammai
Meetha devanai thuthi thiduvom -2 - Thuthi Geethamae

4. Kattugal yaavum aruthumae
Kaneer kavalai agathrinaarae -2
Thuthiyin aadai aruli seitha
Deva devanai thuthi thiduvom -2 - Thuthi Geethamae

5. Vaanathil yesu thonthriduvaar
Ayathamaagi yegiduvom -2
Anbar yesu saayal adainthu
Endrum magilnthathae vaalthiduvom -2 - Thuthi Geethamae