Thikkatra Pillaikalukku Sagaayar

திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரேயல்லவோ
எக்காலம் துணை அவர்க்கு நிற்பவரும் நீரேயல்லவோ
தனிமையான எனக்கு சகாயர் நீரேயல்லவோ
ஆதரவற்ற எனக்கு பக்கபலம் நீரேயல்லவோ (2)

1) என்றைக்கும் மறைந்திருப்பீரோ
தூரத்தில் நின்றுவிடுவீரோ(2)
பேதைகளை மறப்பீரோ ஏழைகளை மறப்பீரோ
இயேசுவே மனமிறங்கும் (2)
- திக்கற்ற பிள்ளைகளுக்கு

2) கர்த்தாவே எழுந்தருளும்
கைதூக்கி என்னை நிறுத்தும் (2)
தீமைகள் என்னை சூழூம் நேரம்
தீயவர் என்னை சூழூம் நேரம்
தூயவரே இரட்சியும் (2)
- திக்கற்ற பிள்ளைகளுக்கு

3) தாய் என்னை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை (2)
ஏழையின் ஜெபம் கேளும் (2)
இயேசுவே மனமிறங்கும் (2)
- திக்கற்ற பிள்ளைகளுக்கு