Singasanathil Veetrirukum Parisutharae

1. சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
பரிசுத்தரே பரிசுத்தரே
ஆராதனை உமக்கு ஆராதனை - 4

2. கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் எங்கள் பரிசுத்தரே
ஆராதனை உமக்கு ஆராதனை - 4

3. ஏழு குத்துவிளக்கின் மத்தியிலே
உலாவிடும் எங்கள் பரிசுத்தரே
ஆராதனை உமக்கு ஆராதனை - 4

4. ஆதியும் அந்தமுமானவரே
அல்ஃபா ஒமெகாவுமானவரே
ஆராதனை உமக்கு ஆராதனை - 4

5. இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை
கரங்களில் உடையவரே
ஆராதனை உமக்கு ஆராதனை - 4

6. அக்னி ஜுவாலை போன்ற கண்களையும்
வெண்கல பாதங்களை உடையவரே
ஆராதனை உமக்கு ஆராதனை - 4

7. பரிசுத்தமும் சத்தியமும்
தாவீதின் திறவுகோலை உடையவரே
ஆராதனை உமக்கு ஆராதனை - 4