சர்வ வல்லவர் என் சொந்தமானார்
சாவை வென்றவர் என் ஜீவனானார்
ஆ… ஆ… ஆ… இது அதிசயம் தானே
ஓ… ஓ… ஓ… இது உண்மைதானே
1. கண்டுகொண்டேன் ஒரு புதையல்
பெற்றுக் கொண்டேன் ஒரு பொக்கிஷம் - 2
இயேசுதான் என் இரட்சகர்
இயேசுதான் என் ராஜா - 2
- சர்வ வல்லவர்
2. சந்தோஷமும் சமாதானமும்
என் உள்ளத்தில் பொங்குதம்மா - 2
பாவமெல்லாம் போக்கிவிட்டார்
பயங்களெல்லாம் நீக்கிவிட்டார்
- சர்வ வல்லவர்
3. பரலோகத்தில் எனது பெயர்
எழுதிவிட்டார் என் இயேசு
என் வாழ்வின் நோக்கமெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வது தான்
- சர்வ வல்லவர்
4. ஊரெல்லாம் சொல்லிடுவேன்
ஊலகெங்கும் பறைசாற்றிவிடுவேன்
ஜீவிக்கின்றார் என் இயேசு
சீக்கிரமாய் வந்திடுவார்
- சர்வ வல்லவர்