Santhosam Santhosam Santhosame

சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
பரலோக சந்தோஷமே
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
அவர் சமூகத்தில் சந்தோஷமே - (2)
- சந்தோஷம் சந்தோஷம்

கர்த்தரின் யுத்தத்தில் நாம் நிற்கும் போது
கலங்கிடத் தேவையில்லை
கைகளை உயர்த்தி ஆராதித்தால்
பெரும் வெற்றியைத் தந்திடுவார் - (2)
- சந்தோஷம் சந்தோஷம்

போராட்டம் பாடுகள் நம் வாழ்வில் வந்தாலும்
சோர்ந்திடவே வேண்டாம்
உலகத்தை ஜெயித்தவர் நம்முடன் இருக்கையில்
ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே
- இயேசு நல்லவர்

சந்தோஷம் என்னுள்ளில் சந்தோஷம்
என் இயேசு வந்தால் சந்தோஷம் (2)
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் (2)
- சந்தோஷம் சந்தோஷம்