சதாகாலமும் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்பவரே
நீர் உண்மையுள்ளவரே (2)
எல்-ஹேனா ஏமன்
நீர் உண்மையுள்ளவரே
தலைமுறை தலைமுறைக்கும்
நீர் உண்மையை காப்பவரே (2)
அன்னியராக வாழ்ந்த என்னை
புத்திரராக மாற்றிவிட்டீர் (2)
ஆப்ரகாமுக்கு சொன்னவற்றை
இயேசு கிறிஸ்துவில் கொடுத்துவிட்டீர் (2)
காண்பித்த தேசத்தை கொடுத்துவிட்டீர்
நட்டாத விருச்சத்தை ருசிக்கச் செய்தீர் (2)
இலவசமான ஆளுகையை
இயேசு கிறிஸ்துவில் கொடுத்துவிட்டீர் (2)