Raja Neer Seitha Nanmaigal

ராஜா நீர் செய்த நன்மைகள்
அவை எண்ணி முடியாதையா
- ராஜா நீர் செய்த நன்மைகள்

ஏறெடுப்பேன் நன்றி பலி
என் ஜீவநாளெல்லாம்
நான் ஏறெடுப்பேன் நன்றி பலி
என் ஜீவநாளெல்லாம்

1. அதிகாலை நேரம் தட்டி தட்டி எழுப்பி
புது கிருபை தந்தீரைய்யா (2)
ஆனந்த மழையில் நனைத்து நனைத்து தினம்
நன்றி சொல்ல வைத்தீரைய்யா (2)
நன்றி ராஜா இயேசு ராஜா (4)
- ராஜா நீர் செய்த நன்மைகள்

2. வேதத்தின் ரகசியம் அறிந்திட புரிந்திட
உன் வெளிச்சம் தந்தீரைய்யா (2)
பாதம் அமர்ந்து நான் உன் குரல் கேக்கும்
பாக்கியம் தந்தீரைய்யா (2)
நன்றி ராஜா இயேசு ராஜா (4)
- ராஜா நீர் செய்த நன்மைகள்

3. ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்து
பாதுகாத்து வந்தீரைய்யா (2)
உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி
வழிநடத்தி வந்தீரைய்யா (2)
நன்றி ராஜா இயேசு ராஜா (4)
- ராஜா நீர் செய்த நன்மைகள்