Paavangal Pokkavae Saabangal

பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே
பூலோகம் வந்தாரையா
மனிதனை மீட்கவே பரலோகம் திறக்கவே
சிலுவையை சுமந்தாரையா (2)

கண்ணீரை துடைத்தாரைய்யா
சந்தோஷம் தந்தாரைய்யா (2)

எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே - 2

1. தங்கத்தை கேட்கவில்லை வைரத்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரைய்யா
ஆஸ்தியை கேட்கவில்லை அந்தஸ்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரைய்யா
நான் தேடி போகவில்லை என்னைத் தேடி வந்தாரைய்யா - 2
- எந்தன் இயேசுவே (4)

2. தாய் உன்னை மறந்தாலும் தந்தை உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார்
நண்பர் உன்னை மறந்தாலும் உற்றார் உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார்
கரம் பிடித்து நடத்திடுவார் கன்மலை மேல் நிறுத்திடுவார் - 2
- எந்தன் இயேசுவே (4)