Naanum En Veedum En Veetar Anaivarum

நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும்
ஓயாமல் நன்றி சொல்வோம் -2
ஒரு கரு போல காத்தீரே நன்றி
என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி -2

எபிநேசரே எபிநேசரே இந்நாள் வரை சுமந்தீரே
எபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே

நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி
நன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே நன்றி

1. ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு
நன்மையால் நிறைந்துள்ளதே -2
ஓரு தீமையும் நினைக்காத நல்ல
ஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல -2 -எபிநேசரே

2. அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும்
உம் கரம் நல்கியதே -2
நீர் நடத்திடும் விதங்களை சொல்ல
(ஒரு) பூரண வார்த்தையே இல்ல -2 -எபிநேசரே

3. ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னை
அழைத்தது அதிசயமே -2
நான் இதற்கான பாத்திரம் அல்ல
இது கிருபையே வேறொன்றும் இல்ல -2 -எபிநேசரே


Naanum en veedum en veetar anaivarum
Ooyamal nandri solvom -2
Oru karu pola kateerae nandri
Ennai sithaiyaamal sumantheerae nandri -2

Ebenezare ebenezare innaal varai sumantheerae
Ebenezare ebenezare en ninaivaai irupavarae

Nandri nandri nandri ithayathil sumantheerae nandri
Nandri nandri nandri karu pola sumantheerae nandri

1. Ondrume illamal thuvangina en vaalvu
Nanmaiyal niranthullathe -2
Oru theemaiyum ninaikaatha nalla
Oru thagappan ummaipola ila -2 - Ebenezare

2. Andrendraikaana en thevaigal yaavaiyum
Um karam nalkiyathae -2
Neer nadathidum vithangalai solla
(Oru) poorana vaarthaiyai illa -2 -Ebenezare

3. Niyanigal mathiyil paithiyam ennai
Alaithathu athisayame -2
Naan itharkaana paathiram alla
Ithu kirubaiyae verondrumilla -2 -Ebenezare