Naan Unnai Vithu Vizhaguvathilai

1. நான் உன்னை விட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை
- நான் உன்னை

தாய் உன்னை மறந்தாலும் ஊர் உன்னை வெறுத்தாலும் (2)
உன்னோடு உனக்காக நான் இருக்கிறேன் (2)

விலகுவதில்லை நான் விலகுவதில்லை
உன்னை விட்டு எப்போதும் விலகுவதில்லை (2)
- நான் உன்னை

2. நீர் என்னை விட்டு விலகுவதில்லை
நீர் என்னை என்றும் கைவிடுவதில்லை
- நான் உன்னை

சொந்தங்கள் பிரிந்தாலும் சோகங்கள் தொடர்ந்தாலும் (2)
என்னோடு எனக்காக நீர் இருக்கின்றீர் (2)

கைவிடுவதில்லை நான் கைவிடுவதில்லை
என்னை மட்டும் எப்போதும் கைவிடுவதில்லை (2)
- நான் உன்னை

3. நான் உன்னை விட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை
- நான் உன்னை

தாய் உன்னை மறந்தாலும் ஊர் உன்னை வெறுத்தாலும் (2)
உன்னோடு உனக்காக நான் இருக்கிறேன் (2)

விலகுவதில்லை நான் விலகுவதில்லை
உன்னை விட்டு எப்போதும் விலகுவதில்லை (2)
- நான் உன்னை