Isravelin Thuthugalil Vaasam

இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்
எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே – 2
ஓ… வாக்குகள் பல தந்து அழைத்து வந்தீர்
ஒரு தந்தை போல எம்மை தூக்கி சுமந்தீர்
இனி நீர் மாத்ரமே… நீர் மாத்ரமே…
நீர் மாத்ரமே… என் சொந்தமானீர்

உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
உம் நாமத்தினால் என்றும் ஜெயம் எடுப்போம்
- இஸ்ரவேலின் துதிகளில்

1. எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம்
காலத்தை படைத்தவர் தேடி வந்தீர் (2)
சிறையிருப்பை மாற்றிதந்தீர்
சிறுமையின் ஜனம் எம்மை உயர்த்தி வைத்தீர் (2)
- இனி நீர் மாத்ரமே…
- உம்மை ஆராதிப்போம்
- இஸ்ரவேலின் துதிகளில்

2. செங்கடலை கண்டு சோர்ந்து போனோம்
யோர்தானின் நிலைகண்டு அஞ்சி நின்றோம் (2)
பயப்படாதே முன் செல்கிறேன் என்றுரைத்து
எம்மை நடத்தி வந்தீர் (2)
- இனி நீர் மாத்ரமே…
- உம்மை ஆராதிப்போம்
- இஸ்ரவேலின் துதிகளில்

3. எதிரியின் படை எம்மை சூழும்போது
ஓங்கிய புயம் கொண்டு யுத்தம் செய்தீர் (2)
பாடச் செய்தீர் துதிக்கச் செய்தீர்
எரிகோவின் மதில்களை இடிக்க செய்தீர் (2)
- இனி நீர் மாத்ரமே…
- உம்மை ஆராதிப்போம்
- இஸ்ரவேலின் துதிகளில்