Ezhuputhal Kaatru Veesiduthae

1. எழுப்புதல் காற்று வீசிடுதே
தேசத்தில் எழுப்புதல் பரவிடுதே
அக்கினியின் காற்று ரூஹா காற்று
என்மேலே வீசிடுதே

வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமே
வீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே
அக்கினியின் காற்று ரூஹா காற்று
என்மேலே வீசிடுதே

2. உலர்ந்த எழும்புகள் உயிர்ப்பிக்கும் காற்று
சேனையாய் எழும்பிட வீசிடுதே
தீர்க்கதரிசன எழுப்புதல் காற்று
என்மேலே வீசிடுதே

3. ஆதாமை சிருஷ்டித்த ரூஹா காற்று
புதிய காரியங்கள் உருவாக்குதே
உருவாக்கும் காற்று உயிர்தரும் காற்று
என்மேலே வீசிடுதே

4. மேல்வீட்டறையிலே வீசிய காற்று
அக்கினி நாவாய் இறங்கிடுதே
அக்கினியின் காற்று எழுப்புதல் காற்று
சபையில் வீசிடுதே