எண்ணிடலங்கா ஸ்தோத்திரம்
தேவா என்றென்றும் நான் பாடுவேன்
இந்நாள் வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே - ஆஹா
1. வானாதி வானங்கள் யாவும்
அதின் கீழுள்ள ஆகாயமும்
பூமியில் காண்கின்ற யாவும்
கர்த்தா உம்மைப் போற்றுமே
2. காட்டினில் வாழ்கின்ற யாவும்
கடும் காற்றும் பனி தூறலும்
நாட்டினில் வாழ்கின்ற யாவும்
நாதா உம்மை போற்றுமே
3. நீரினில் வாழ்கின்ற யாவும்
இந்நிலத்தின் ஜீவ ராசியும்
பாரினில் பறக்கின்ற யாவும்
பரனே உம்மைப் போற்றுமே
4. வால வயதுள்ளானோரும்
மிகும் வயதால் முதிர்ந்தோர்களும்
பாலகர் தம் வாயினாலும்
பாடி உம்மைப் போற்றுவாரே
Ennnnidalangaa sthoththiram
Devaa endrenrum naan paaduvaen
Innaal varai en vaalvilae
Neer seytha nanmaikkae - Aaha
1. Vaanaathi vaanangal yaavum
Athin geelulla aakaayamum
Poomiyil kaannkinta yaavum
Karththaa ummaip pottumae
2. Kaattinil vaalkinta yaavum
Kadum kaattum pani thooralum
Naattinil vaalkinta yaavum
Naathaa ummai pottumae
3. Neerinil vaalkinta yaavum
Innilaththin jeeva raasiyum
Paarinil parakkinta yaavum
Paranae ummaip pottumae
4. Vaala vayathullaanorum
Mikumvayathaal muthirnthorkalum
Paalakar tham vaayinaalum
Paati ummaip pottuvaarae