Engal Vaalnellalam Kalikoornthu Magilnthida

எங்கள் வாழ்நாளல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திட
காலையிலே உம் கிருபையினால் திருப்தியாக்குமையா

1. தீங்கு மேற்கொண்ட நாட்களுக்கும்
துன்பம் கண்ட வருடத்திற்கும் - 2
சரியாய் இன்று மகிழச்செய்து
சந்தோஸத்தாலே நிரப்புகிறீர்

நீர்தானே நீர்தானே என் தஞ்சம் நீர் தானே
நீர்தானே நீர்தானே அடைக்கலம் நீர் தானே
என் தஞ்சம் நீர் தானே

2. புகலிடம் நீரே பூமியிலே
அடைக்கலம் தஞ்சம் நீர் தானே
எனது காப்பாளர் நீர் தானே
இறுதி வரைக்கும் நீர் தானே

3. உலகமே உருவாக்கப்படும் முன்னே
மழைகள் குன்றுகள் தோன்றும் முன்னே
எப்போதும் இருந்தவர் நீர் தானே
என்றும் இருப்பவர் நீர் தானே

4. செய்யும் செயல்கள் செம்மைப்படுத்தும்
செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும்
அற்புத அடையாளம் காணச் செய்யும்
ஆதி திருச்சபை தோன்ற செய்யும்

Engal vaalnellalam kalikoornthu magilnthida
Kaalaiyilae um kirubaiyinaal thirupthiyaakumaiyaa

1. Theengu maerkonda naatkalukkum
Thunpam kanda varudathirukum - 2
Sariyaai indru magilaseithu
Santhosathaalae nirapugireer

Neerthanae neerthanae en thanjam neer thanae
Neerthanae neerthanae adaikalam neer thanae
En thanjam neer thanae

2. Pugalidam neer boomiyilae
Adaikalam thanjam neer thanae
Enathu kaapalar neer thanae
Iruthi varaikum neer thanae

3. Ulagamae uruvakapadum munnae
Malaigal kundrugal thondrum munnae
Eppothum irunthavar neer thanae
Endrum irupavar neer thanae

4. Seiyum seyalgal semmaipaduthum
Seyalgal anaithilum vetri thaarum
Arputha adaiyaalam kana seiyum
Aathi thirusabai thondra seiyum