Deva Pitha Entan Maeipan Azhzho

தேவனே நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்

மா வலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே! தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் - தேவனே

யாக்கோபைப் போல் போகும் பாதையில் - பொழுதுபட்டு
இராவில் இருள் வந்து மூடிட
துக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து, தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன் வாக்கடங்கா நல்ல நாதா - தேவனே

பரத்திற்கேறும் படிகள் போலவே - என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா என்றன் தேவனே
கிருபையாக நீர் எனக்கு தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னை அழைத்து
அன்பின் தூதனாகச் செய்யும் - தேவனே

நித்திரையினின்று விழித்து - காலை எழுந்து
கர்த்தாவே! நான் உம்மைப் போற்றுவேன்
இத்தரையில் உந்தன் வீடாய், என் துயர் கல் நாட்டுவேனே
என்றான் துன்பத்தின் வழியாய்எ இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே

ஆனந்தமாம் செட்டை விரித்து - பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங்கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மை
கிட்டிச் சேர்வேன் - தேவனே


Devanae naan umathanntaiyil - innum nerungich
Servathae en aaval poomiyil

Maa valiya koramaaka van siluvai meethinil naan
Kovae! thonga naeritinum aavalaay ummanntai servaen - Devanae

1. Yaakkopaip pol pokum paathaiyil - poluthu pattu
Iraavil irul vanthu mootida
Thookkaththaal naan kallil saaynthu, thoonginaalum en kanaavil
Nnokkiyummaik kitti servaen vaakkadangaa nalla naathaa - Devanae

2. Paraththukkaerum patikal polavae - en paathai thontap
Pannnum aiyaa enthan Devanae
Kirupaiyaaka neer enakku tharuvathellaam umathanntai
Arumaiyaay ennaiyalaiththu
Anbin thootanaga seiyum - Devanae

3. Niththiraiyinintu viliththuk - kaalai elunthu
Karththaavae! naan ummaip pottuvaen
Iththaraiyil unthan veedaay, en thuyark kal naattuvaenae
Entan thunpaththin valiyaay innum
Ummaik kitti servaen - Devanae

4. Aananthamaam setta? viriththup - paravasamaay
Aakaayaththil aerip poyinum
Vaana manndalang kadanthu paranthu maelae sentitinum
Makilvutru kaalaththilum naan maruviyummaik
Kittik servaen - Devanae