Alagumilai Soundharyamilai

அழகுமில்லை சௌந்தரியமில்லை
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க (2)
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே (2)

அந்தோக் கல்வாரியில்
அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்கினார் (2)

மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமை குருசைத் தெரிந்தெடுத்தாரே (2)
மாய லோகத்தோ டழியாது யான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே (2) - அந்தக் கல்வாரியில்

முள்ளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்
கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும் (2)
குருதி வடிந்தவர் தொங்கினார்
வருந்தி மடிவோரையும் மீட்டிடவே (2) - அந்தக் கல்வாரியில்

Azhagumilai soundharymilai
Antha keduraar enthai meetka (2)
Pala ninthaigal sumanthalumae
Pathinaayiram perilum siranthavarae (2)

Anthok kalvariyil
arumai iratchagarae
Sirumai adanthae thonginaar (2)

Magimai maatchimai maranthilanthoraai
Kodumaai kurusai therintheduthavarae (2)
Maaya logatho anbai anthidavae (2) - Antok kalvariyil

Mulin mudiyum sevangi aninthum
Kaal karangal aanigal paainthum (2)
Kuruthi vadinthaavar thonginaar
Varunthi madivoraiyum meetidavae (2) - Antok kalvariyil