Aathikalaiyil Sooriyanai Parkaiyilae

அதிகாலையில் சூரியனை பார்க்கையிலே
என் தேவன் உறங்காதவர்
என்று நான் அறிவேன்

குருவிகள் குரலை கேட்கையில்
என் தேவன் கேட்கிறார்
என் பயமறிவார் கண்ணீர் காண்பார்
அழுகையும் துடைப்பார்

எனக்கொரு தேவன் உண்டு
அவர் என்னை காண்கின்றார் - அவர்
என்றென்றும் என்னை காண்கின்றார்
என்னை காண்கின்றார்

எல்ரோயீ என்னை காணும் தேவனே - (4) - அதிகாலையில்

மேகம் கடப்பதை காண்கையில்
நான் மனதில் ஜெபிக்கின்றேன்
இந்த உலகத்தின் மாயைகள்
என்னை மேற்கொள்ளக் கூடாது

நதிகள் புரள்வதை காண்கையில்
நான் எதற்கும் அஞ்சிடேன்
அவர் அன்பு என்றும் மாறாது
என்றும் நமக்குண்டு - எனக்கொரு தேவன்


Aathikalaiyil sooriyanai parkaiyilae
En devan urangathavar
Endru naan arivaen

Kurivigal kuralai ketkaiyilae
En devan ketkirar
En bayamarivaar kaneer kaanbar
Azhugaiyum thudaipaar

Enakoru devan undu
Avar ennai kankinrar - avar
Endrendrum ennai kaankinrar
Ennai kankinrar

Elrohi ennai kaanum devanae (2) - Aathikalaiyil

Megam kadapathai kaankaiyilae
Naan manathil jebikindraen
Intha ulagathin maayaigal
Ennai merkollakoodathu

Naathigal purazhvathai kaankaiyil
Naan etharkum anjidaen
Avar anbu endrum marathu
Endrum namakundu - Enakoru devan