Andavar Padaitha Vetriyin

ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
இன்று அக மகிழ்வோம் அக்களிப்போம்
அல்லேலூயா பாடுவோம் - 2

1. எனக்குத் துணை செய்ய எனது ஆண்டவர்
என் பக்கம் இருக்கின்றார் – 2
உலக மனிதர்கள் எனக்கு எதிராக
என்ன செய்ய முடியும் - 2

தோல்வி இல்லை நமக்கு
வெற்றிப் பவனி செல்லுவோம் - 2

2. எனது ஆற்றலும் எனது பாடலும்
எனது மீட்புமானார் – 2
நீதிமான்களின் கூடாரத்தில்
வெற்றிக் குரல் ஒலிக்கட்டும் - 2

3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
மூலைக் கல்லாயிற்று
கர்த்தர் செயல் இது அதிசயம் இது
கை தட்டி பாடுங்களேன் - 2

4. என்றுமுள்ளது உமது பேரன்பு
என்றும் பறை சாற்றுவேன் - 2
துன்ப வேளையில் நோக்கிக் கூப்பிட்டேன்
துணையாய் வந்தீரய்யா – 2