Aayiramaayiram Paadalgalal Athisaya Naadhanai

ஆயிரமாயிரம் பாடல்களால்
அதிசய நாதனை துதித்திடுவேன்
(நான்) ஆனந்த கீதம் பாடிடுவேன்-2
ஆயிரமாயிரம் பாடல்களால்....

நல்லவர் இயேசு வல்லவர்
அவர் என்றென்றும் போதுமானவர்-2
நாள்தோறும் என் பாரம் சுமக்கின்றவர்
நன்றியால் வணங்கிடுவேன்-2
ஆயிரமாயிரம் பாடல்களால்....

1. வானதூதர் சேனையெல்லாம்
வாழ்த்துகின்ற பரிசுத்தரே
வான மகிமை விட்டு
மானிடராய் வந்தவரே-2
வானிலும் பூவிலும் என் ஆசை நீரே
வாழ்த்தி என்றும் திரு நாமம் துதித்திடுவேன்-2
- நல்லவர் இயேசு

2. இஸ்ரவேலின் துதிகளில்
வாசம் செய்யும் தூய தேவனே
இக்கட்டில் தம் ஜனங்களின்
இரட்சகராய் வருபவரே-2
செங்கடலோ சேனைகளோ எதிரே வந்தாலும்
சோர்ந்திடாமல் கரம்தட்டி துதித்திடுவேன்-2
- நல்லவர் இயேசு

3. ஆழியின் அலைபோல்
சோதனைகள் பெருகினாலும்
அக்கினியின் சோதனையில்
என் உள்ளம் தளர்ந்தாலும்-2
தாயைப்போல் கரங்களில் தாங்கி என்னை நீர் நடத்தி
ஆற்றிய கிருபைக்காய் துதித்திடுவேன்-2
- நல்லவர் இயேசு

Aayiram Aayiram Padalgalaal
Athisaya Naathanai Thuthithiduvaen
(Naan) Aanantha Geetham Padiduvaen-2
Aayiram Aayiram Padalgalaal...

Nallavar Yesu Vallavar
Avar Endrendrum Pothumaanavar-2
Naalthorum En Baaram Sumakkindravar
Nandriyaal Vanagiduvaen-2
Aayiram Aayiram Padalgalaal...

1. Vaanathoothar Senayellaam
Vaazhthugindra Parisuththarae
Vaana Magimai Vittu
Manodaraai Vanthavarae-2
Vaanilum Poovilum En Aasai Neerae
Vaazhthi Endrum Thiru Naamam Thuthithiduvaen-2
-Nallavar

2. Isravelin Thuthigalil
Vasam Seiyum Thooya Devanae
Ikkattil Tham Janangalin
Ratchagaraai Varubavarae-2
Sengadalo Senaigalo Ethirae Vanthaalum
Sornthidaamal Karam Thatti Thuthiduvaen-2
-Nallavar

3. Aazhiyun Alai Pol
Sothanaigal Peruginaalum
Akkiniyin Sothanayil
En Ullam Thalarnthaalum-2
Thaayaippol Karangalil Thaangi Ennai Neer Nadathi
Aatriya Kirubaikkaai Thuthithiduvaen-2
-Nallavar